குஷ்பு கார் மீது முட்டை வீசிய வழக்கு: பிப். 27-க்கு ஒத்தி வைப்பு

மேட்டூரில் குஷ்பு கார் மீது முட்டை வீசிய வழக்கு, பிப். 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மேட்டூரில் குஷ்பு கார் மீது முட்டை வீசிய வழக்கு, பிப். 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை குஷ்பு கூறிய கருத்துகளுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்களில் குஷ்பு மீது வழக்குகள் தொடரப்பட்டன.
இதேபோல், பாமக வழக்குரைஞர் பிரிவு செயலர் அ.முருகன், குஷ்பு மீது மேட்டூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் குஷ்பு ஆஜராகாத காரணத்தால், அவருக்கு பிணையில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனால் நீதிமன்றத்தில் சரணடைந்து வாரண்டை ரத்து செய்த குஷ்பு காரில் சென்னை திரும்பினார். அப்போது, அவரது கார் மீது அழுகிய தக்காளி, முட்டை ஆகியன வீசப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பாக, மேட்டூர் வட்டாட்சியர் பைஸ்முகமதுகான் அளித்த புகாரின்பேரில், பாமகவைச் சேர்ந்த ஆர்.அறிவழகன், வெடிகாரனூர் ராஜேந்திரன் உள்பட 41 பேர் மீது மேட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு மேட்டூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண் 1-இல் நீதித்துறை நடுவர் ராஜா முன்னிலையில் திங்கள்கிழமைவிசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை நீதித்துறை நடுவர் ராஜா இந்த மாதம் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com