சேலம் மாவட்டத்தில்  ரூ.103 கோடியில் திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தொடக்கி வைக்கிறார்

சேலம் மாவட்டத்தில் ரூ.103.28 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை தொடக்கி வைக்கிறார். 

சேலம் மாவட்டத்தில் ரூ.103.28 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை தொடக்கி வைக்கிறார். 
சேலம் இரும்பாலை சாலை சந்திப்பில் ரூ.21.97 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.  இதையடுத்து மேட்டூரில் ரூ.1 கோடியில் நிறுவப்பட்டுள்ள நினைவுத் தூண்,  புனரமைக்கப்பட்ட மேட்டூர் அணைப் பூங்கா மற்றும் ரூ.10.72 கோடியில் மேட்டூர் அணையை புனரமைத்து மேம்படுத்தும் பணியைத் திறந்து வைத்து, ரூ.31 கோடியில் புதிய கட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.  எடப்பாடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு ரூ.12.74 கோடி மதிப்பிலான 16 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும்,  ரூ.25.55 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 1,727 பயனாளிகளுக்கு ரூ.12.28 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
இதைத்தொடர்ந்து, வெள்ளரிவெள்ளியில் ரூ.30 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைக்கிறார்.  சேலம் மாவட்டத்தில் மொத்தம் ரூ.103.28 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகளை முதல்வர் தொடக்கிவைக்கிறார்.
வரவேற்பு 
  சங்ககிரி அருகே உள்ள வீரச்சிபாளையத்தில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பூங்கொத்து அளித்து முதல்வரை வரவேற்றார்.  அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.ராஜன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com