ஜல்லிக்கட்டுக்கு  தயாராகிவரும் கூலமேடு

ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளதையொட்டி,  கூலமேடு கிராமத்தில் காவல் துறையினர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர். 

ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளதையொட்டி,  கூலமேடு கிராமத்தில் காவல் துறையினர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர். 
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கூலமேடு ஊராட்சியில் பொங்கல் திருநாளையொட்டி ஜனவரி 17-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். நிகழாண்டும் வரும் ஜனவரி 17 -ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதையொட்டி ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள்,  மாடுபிடி வீரர்கள் பதிவு நடைபெற்று வருகிறது.மேலும், ஜல்லிக்கட்டை பொதுமக்கள் அமர்ந்து பார்வையிடுவதற்கு வசதியாக பார்வையாளர் காலரியை அமைத்து வருகின்றனர்.
இதுவரை சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, ராமநாதபுரம்,புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 47 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல மாடுபிடி வீரர்கள் 400 க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். 
ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.பொன்கார்த்திக்குமார்,  காவல் ஆய்வாளர் என்.கேசவன் ஆகியோர் பாதுகாப்பு விழா குறித்து குழுவினருடன் ஆலோசனை செய்து வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்குத் தயாராக உள்ள நிலையில் கிராம மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com