எடப்பாடியில் ரூ. 25.55 கோடியில் புதிய திட்டப் பணிகள்: முதல்வர் தொடக்கிவைத்தார்

சேலம் மாவட்டம், எடப்பாடியில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், ரூ.25.55 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கிவைதார்.

சேலம் மாவட்டம், எடப்பாடியில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், ரூ.25.55 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கிவைதார்.
எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற, அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தலைமை வகித்தார். விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, 1,227 பயனாளிகளுக்கு ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ரூ.12.74 கோடி மதிப்பீட்டில் முடிவுற்று 16 திட்டப் பணிகளை
தொடக்கிவைத்தார்.
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுப்பணி, ஊரக வளர்ச்சி, சுகாதாரம் உள்ளிட்ட 14 துறைகள் சார்ந்த ரூ. 25.55 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடக்கிவைத்தார். அப்போது முதல்வர் பேசியது: எடப்பாடி நகரப் பகுதியான நைனாம்பட்டியிலிருந்து
- கவுண்டம்பட்டியை இணைத்திட ரூ. 2கோடி மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி கட்டடம், எடப்பாடி நகராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம், நஞ்சுண்டேசுவரர் ஆலயம் சார்பில் புதிய திருமணமண்டபம், வனவாசி பகுதியில்
புதிய அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பேருந்து நிலையம் அருகில் பூங்கா, அரசு சார்பில் அம்மா பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. எடப்பாடி நகரைச் சுற்றி ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புறவட்டச் சாலை அமைக்கும் பணி நிறைவு பெறும் நிலையில், திருச்செங்கோடு முதல் ஓமலூர் வரை புதிய நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி விரைவில் துவங்கப்படும்.
எடப்பாடி, கொங்கணாபுரம் ஒன்றிய பகுதியில் கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணியின் போது, விடுபட்ட குடியிருப்புகளுக்கு தற்போது ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் விடுபட்ட பகுதிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தங்குதடையின்றி கிடைக்கும் என்றார் முதல்வர்.
நிகழ்சியில் சேலம் மக்களவை உறுப்பினர் வி.பன்னீர்செல்வம்,
சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜா, வெங்கடாசலம், வெற்றிவேல், நகர்மன்ற முன்னாள் தலைவர் டி.கதிரேசன், கரட்டூர் மணி, மாதேஸ் உள்ளிட்ட நிர்வாகிகள்
கலந்துகொண்டனர். தொடர்ந்து, எடப்பாடி நஞ்சுண்டேசுவரர் ஆலய பிரகாரத்தில் தனது சொந்த செலவில் அமைக்கப்பட்டு வரும் முருகப் பெருமான் ஆலய கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, வெள்ளரிவெள்ளி பகுதியில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அம்மா உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினர் மாதேஸ்வரன், வெள்ளரிவெள்ளிகந்தசாமி, கூட்டுறவு சங்கத் தலைவர் அசோக், பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com