வாழப்பாடியில் சிறு, குறு விவசாயி சான்று கேட்டு 293 பேர் மனு

வாழப்பாடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில், சிறு குறு விவசாயி சான்று கேட்டு 293 விவசாயிகள் மனு கொடுத்தனர். தகுதி வாய்ந்த 27 விவசாயிகளுக்கு, முகாமிலேயே சான்றிதழ் வழங்கப்பட்டது

வாழப்பாடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில், சிறு குறு விவசாயி சான்று கேட்டு 293 விவசாயிகள் மனு கொடுத்தனர். தகுதி வாய்ந்த 27 விவசாயிகளுக்கு, முகாமிலேயே சான்றிதழ் வழங்கப்பட்டது.
 நுண்ணீர் பாசனத் திட்ட மானியம் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளின் வாயிலாக சலுகைகளை பெறுவதற்கு, வருவாய்த் துறை வழங்கும் சிறு, குறு விவசாயிகள் சான்று சமர்ப்பிக்க வேண்டும். விவசாயிகளுக்கு அந்த சான்றிதழை வழங்குவதற்கு, வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத் துறை மற்றும் வருவாய்த் துறை இணைந்து, வாழப்பாடியில் வெள்ளிக்கிழமை மாலை சிறப்பு முகாம் நடத்தின.
 வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் வாழப்பாடி வட்டாட்சியர் பொன்னுசாமி தலைமையில் நடைபெற்ற அந்த முகாமில், சிறு குறு விவசாயி சான்று கேட்டு 293 விவசாயிகள் மனு கொடுத்தனர். உரிய ஆவணங்களை இணைத்து மனு செய்த தகுதியான 27 விவசாயிகளுக்கு முகாம் வளாகத்திலேயே சிறு குறு விவசாயிக்கான சான்று வழங்கப்பட்டது. எஞ்சியுள்ள விவசாயிகளுக்கு, நிலுவை சான்றுகளை சமர்ப்பித்தவுடன் ஓரிரு நாள்களில் வழங்குவதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இந்த முகாமில், வாழப்பாடி உதவி இயக்குநர்கள் வேளாண்மைத் துறை எம்.சாந்தி, தோட்டக் கலைத் துறை மீனாட்சிசுந்தரம் மற்றும் தோட்டக்கலை அலுவலர் நித்யா, மண்டல துணை வட்டாட்சியர் பாலாஜி, வருவாய் ஆய்வாளர்கள் மாதேஸ்வரன், அகிலன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com