பள்ளி பாடங்களுக்கு ஏற்ப பெரியார் பல்கலை. பாடத் திட்டத்தில் மாற்றம்: துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தகவல்

தமிழக அரசு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத் திட்டம், கேள்வித்தாள் முறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு வரும் கல்வியாண்டில் பல்கலைக்கழகப் பாடத்திட்டதிலும்

தமிழக அரசு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத் திட்டம், கேள்வித்தாள் முறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு வரும் கல்வியாண்டில் பல்கலைக்கழகப் பாடத்திட்டதிலும் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பொ.குழந்தைவேல் கூறினார்.
 பல்கலைக்கழகத் துணைவேந்தர் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து துறை சார் வல்லுநர்களைக் கொண்ட பாடத்திட்டக் குழுக்கள் கூடி பாடத்திட்டத்தில் தேவையான மாற்றங்களைக் கொண்டு வந்தன. அதேபோல கேள்வித்தாள் முறையிலும் மாற்றங்களை கொண்டுவந்தன. இந்த மாற்றங்கள் அனைத்தையும் இணைவுபெற்றக் கல்லூரிகளுக்கும் விரிவுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட உள்ளன.
 தற்போது மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை அங்கீகரிக்கும் இளங்கலை மற்றும் முதுகலைப் பாடத்திட்டத் தலைவர்களைக் கொண்ட கல்வி நிலைக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இணைவுபெற்றக் கல்லூரிகளின் 35 இளங்கலை, 25 முதுகலைப் பாடங்களுக்கான பாடத்திட்ட மாற்றங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும், பல்கலைக்கழகத்தின் 29 பாடங்களுக்கான பாடத் திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் கூட்டத்தில் முன்மொழியப்பட்டு ஏற்றுக்
 கொள்ளப்பட்டன.
 இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து துணைவேந்தர் பேராசிரியர் பொ.குழந்தைவேல் பேசியது: தமிழக அரசு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் பாடத்திட்டம் மற்றும் கேள்வித்தாள் முறைகளில் மாற்றம் கொண்டு வந்திருப்பதைக் கருத்தில் கொண்டு பல்கலை. பாடத் திட்டத்தில், தேர்வு முறையில் மாற்றங்களைக் கொண்டுவர உள்ளோம் என்றார்.
 இக்கூட்டத்தில் பதிவாளர் பேராசிரியர் மா.மணிவண்ணன், டீன் பேராசிரியர் வ.கிருஷ்ணகுமார், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி(பொ) பேராசிரியர் அ.முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com