மேட்டூர் அணை நீர்மட்டம் 39.94 அடி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 39.94 அடியாக இருந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 39.94 அடியாக இருந்தது.
 அணைக்கு நொடிக்கு 847 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக நொடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 12.05 டி.எம்.சி.
 ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. அணையின் நீர் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை என பொதுப்பணித் துறை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com