சோனா கல்லூரியில் தொழில்துறை ஆட்டோமேஷன் மையம் திறப்பு

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்துறை ஆட்டோமேஷன் சிறப்பு மையம் திறக்கப்பட்டது.

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்துறை ஆட்டோமேஷன் சிறப்பு மையம் திறக்கப்பட்டது.
 சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரியின் துணைத் தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா முன்னிலை வகித்தனர். கல்லூரி தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்தார்.
 சிறப்பு விருந்தினர்களாக குர்கான் யஸ்க்ஸ்கா இந்தியா பிரைவேட் லிமிடெட் முதன்மை இயக்கு அலுவலர் அஜய் குர்ஜார் மற்றும் மும்பை மஹேந்திரா அன்ட் மஹேந்திரா நிறுவனத்தின் அதிகாரி சுரேஷ் சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டு தொழில்துறை ஆட்டோமேஷன் சிறப்பு மையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினர்.
 சேலம் பகுதியில் முதன்முறையாக சோனா கல்லூரியில் இச்சிறப்பு மையம் நிறுவப்பட்டுள்ளது. உற்பத்தி தொழில்துறை உள்ள ஆட்டோமேஷன் தானாகவே வெல்டிங், பொருள் கையாளுதல், பொதி செய்தல், பாலிசிங், விநியோகித்தல், வெட்டுதல் போன்ற பணிகளை செய்ய தொழில்துறை இயந்திரங்களை ஒருங்கிணைப்பதற்கான செயல்முறையாகும்.
 இந்த சிறப்பு மையத்தில் ஆட்டோமேஷன், ரோபாட்டிக்ஸ் மற்றும் ஸ்கேடா மென்பொருள் போன்ற பயிற்சி அளிக்கப்பட உள்ளன.
 இந்த பயிற்சியின் மூலம் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறன்கள் அதிகரிக்கும் என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
 விழாவில், சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார், கல்வி பிரிவு இயக்குநர் கௌசிக், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com