புதர்மண்டிக் கிடக்கும் நீர்நிலைகள், வாய்க்கால்கள்: தூர்வாரி சீரமைக்கப்படுமா? 

வாழப்பாடி பகுதியில் புதர்மண்டிக் கிடக்கும் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளையும், நீரோடைகள், தடுப்பணைகள் மற்றும் வாய்க்கால்களையும்

வாழப்பாடி பகுதியில் புதர்மண்டிக் கிடக்கும் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளையும், நீரோடைகள், தடுப்பணைகள் மற்றும் வாய்க்கால்களையும், பருவ மழை தொடங்குவதற்கு முன் தூர்வாரி சீரமைக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சியில் காளியம்மன் நகர் பாப்பான் ஏரி, புதுப்பாளையம் செட்டியேரி, சென்னாக்குட்டை, வடக்குக்குட்டை மற்றும் சின்னாறு, பெரியாறு, கோதுமலை, அமனாக்கரடு, கொட்டிப்பள்ளம் நீரோடைகளும், ஏரி மற்றும் பாசன வாய்க்கால்களும், மதகு, வருகால், மறுகால் வாய்க்கால்களும் உள்ளன.
மேலும் முத்தம்பட்டி, சேசன்சாவடி, தேக்கல்பட்டி, சிங்கிபுரம், சோமம்பட்டி, மன்னார்பாளையம், பொன்னாரம்பட்டி, துக்கியாம்பாளையம் உள்ளிட்ட 20 கிராம ஊராட்சிகளிலும் ஏரிகள், நீரோடைகள், குளம், குட்டைகள் மற்றும் பாசன வாய்க்கால்கள் உள்ளன. பெரும்பாலான நீர்நிலைகள், நீரோடைகள், தடுப்பணைகள் மற்றும் வாய்க்கால்கள் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக பராமரிப்பின்றி புதர்மண்டிக் கிடக்கின்றன.
அதனால் மழைக் காலங்களில் மழை நீரை சேகரித்து வைத்து நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்திக் கொள்ளவும், பாசனத்துக்கு பயன்படுத்திக் கொள்ளவும் வழியின்றி பொதுமக்களும், விவசாயிகளும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். 
சுட்டெரிக்கும் கோடை காலம் முடிவுக்கு வந்ததும், பருவ மழைக் காலம் தொடங்கவுள்ளது. அதனால், மழைநீரை சேகரித்து பயன்படுத்தவும், நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும், குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களில் வெள்ளம் தேங்கி நிற்பதை தவிர்க்கவும், வாழப்பாடி பகுதியில் புதர்மண்டிக் கிடக்கும் நீர்நிலைகள், நீரோடைகள், தடுப்பணைகள் மற்றும் வாய்க்கால்களை தூர்வாரி புதுப்பிக்க வேண்டும். 
அதற்கான கூட்டுப்பணியை வாழப்பாடி வட்ட வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித் துறை, வனத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளவும், தொடர்ந்து பராமரிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டுமென, அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, சேலம் மாவட்ட பசுமை தாயக அமைப்பாளர் நீர்முள்ளிக்குட்டை வெங்கடாஜலம் கூறியது: வாழப்பாடி பகுதியில் புதர்மண்டிக் கிடைக்கும் அனைத்து நீர்நிலைகளையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்றி முறையாக தூர்வாரி சீரமைக்க, அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com