வாழப்பாடியில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா

வாழப்பாடியில் சிறப்பாக பணியாற்றி மூன்றாண்டுகள் நிறைவு செய்த காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுக்கு, பொதுமக்கள் சார்பில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. 

வாழப்பாடியில் சிறப்பாக பணியாற்றி மூன்றாண்டுகள் நிறைவு செய்த காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுக்கு, பொதுமக்கள் சார்பில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. 
சேலம் மாவட்டம், வாழப்பாடி காவல் நிலையத்துக்கு மூன்றாண்டுக்கு முன் காவல் ஆய்வாளராக ஆர்.உமாசங்கர் நியமிக்கப்பட்டார். 
இதையடுத்து, ராம்கோ சிமென்ட், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்போடு வாழப்பாடி புதிய காவல் நிலையத்துக்கு சுற்றுச்சுவர், மனுதாரர் தங்குமிடம் ஆகியவற்றை அவர் அமைத்தார். மரக் கன்றுகளை நட்டு பசுமையாக்கினார். வாழப்பாடி பேருந்து நிலையப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சென்டர் மீடியன், சாலை தடுப்புகளை அமைத்து போக்குவரத்துகளை சீரமைத்தார்.
அவரோடு சிறப்பு காவல் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட தனசேகரன், லாசர் கென்னடி, கிருஷ்ணன்(தனிப்பிரிவு), உதயகுமார், பெண் காவலர் மீனாட்சி ஆகியோரும் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர்.
இந்நிலையில், மூன்றாண்டு காவல் பணியை நிறைவு செய்த காவல் ஆய்வாளர் உமாசங்கர் நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். 
இதையடுத்து, சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுக்கு, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில், வாழப்பாடி நீதித்துறை குற்றவியல் நீதிமன்ற நடுவர் சந்தோஷம், துணை காவல் கண்காணிப்பாளர் சூர்யமூர்த்தி, காரிப்பட்டி காவல் ஆய்வாளர் கமலசேன், வாழப்பாடி பகுதி சமூக ஆர்வலர்கள் பி.என்.குணசேகரன், குறிச்சி சண்முகம், ஜவஹர், சேலம் பாலசந்தர், பெரியார்மன்னன், செவ்வந்தி, முருகன், வழக்கறிஞர் ராஜேந்திரன், பேளூர் சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு பாராட்டு தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com