வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் குப்பைக் குழி அமைக்க எதிர்ப்பு

ஆத்தூர் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் குப்பைக் குழி அமைப்பதற்கு அப்பகுதி பொதுமக்கள் மரக் கன்றுகள் நட்டு செவ்வாய்க்கிழமை எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆத்தூர் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் குப்பைக் குழி அமைப்பதற்கு அப்பகுதி பொதுமக்கள் மரக் கன்றுகள் நட்டு செவ்வாய்க்கிழமை எதிர்ப்புத் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் தெற்குகாடு கண்ணாடி மில் அருகில் அமைந்துள்ள அண்ணா நகர் தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தமிழக அரசின் மக்கும் குப்பை மூலம் தொழுஉரம் தயாரிக்க இடம் தேர்வு செய்து அதற்கான பணியினை ஆத்தூர் நகராட்சி ஆரம்பித்தது.
இதனை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் குப்பைக் குழி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து ஆத்தூர் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் நிர்வாகம் தொடர்ந்து வேலையை செய்து வந்தது.
இதனையடுத்து, அந்த இடத்தில் பூங்கா அமைக்க பொதுமக்கள் திரண்டு மரக் கன்றுகள் நட ஆரம்பித்தனர். தகவல் அறிந்த ஆத்தூர் நகராட்சி ஆணையர் க.கண்ணன் பொதுமக்களை சந்தித்து, இந்த குப்பைக் குழியினால் வேலைவாய்ப்பு மற்றும் உரம் கிடைக்கும். சுகாதாரக் கேடு விளைவிக்காது என கூறினார். 
ஆனாலும், பொதுமக்கள் இதை ஏற்றுக் கொள்ளாமல் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com