ஏற்காடு கோடை விழா நிறைவு: நாய்கள் கண்காட்சி

ஏற்காட்டில் கடந்த 5 நாள்களாக நடைபெற்று வந்த 43 -ஆவது கோடை விழா புதன்கிழமை மாலையுடன் நிறைவு பெற்றது.

ஏற்காட்டில் கடந்த 5 நாள்களாக நடைபெற்று வந்த 43 -ஆவது கோடை விழா புதன்கிழமை மாலையுடன் நிறைவு பெற்றது.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 43-ஆவது கோடைவிழா மற்றும் மலர்க் கண்காட்சி நிறைவு விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பேசியது:
ஏற்காட்டில் 5 நாள்கள் நடைபெற்ற கோடை விழா மலர்க்கண்காட்சியை ஒன்றரை லட்சம் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு சென்றுள்ளனர்.
மேலும், கோடைவிழா, மலர்க் கண்காட்சியில் 1 லட்சத்து 50 ஆயிரம் மலர்கள், 12ஆயிரம் மலர்த் தொட்டிகளை வைத்து 5 நாள்களும் பராமரித்து வந்த தோட்டக் கலைத்துறை அலுவலர்களுக்குப் பாராட்டுகள்.
இவ்விழா அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியால் வெற்றி பெற்றுள்ளது. மேலும், சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள், படகுப் போட்டிகள், விளையாட்டுத் துறை சார்பில் விளையாட்டு நிகழ்ச்சிகள், அரசுத் துறை சார்பில் 42 பொருள்காட்சி அரங்குகள், கால்நடைத்துறை சார்பில் நாய் கண்காட்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி அதிகாரிகள் மூலம் கொழு கொழு குழந்தைகள் போட்டிகள் நடைபெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்விழா கோடைவிழாவாக மட்டுமல்லாமல் இவ்வாண்டு பசுமை விழாவாக ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டதற்கும் பாராட்டுகள். சுகாதாரத்தை பராமரித்த அனைத்து அதிகாரிகள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு பாராட்டு என்றார். விழாவில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சிறப்பாக பணியாற்றிய காவல்துறை ,போக்குவரத்துத் துறையினருக்கும் ஆட்சியர் பாராட்டுத் தெரிவித்தார்.

ஏற்காட்டில் கோடைவிழா நிறைவு நாளான புதன்கிழமை ஊராட்சி கலையரங்கம் அருகில் உள்ள திடலில் நாய்கள் மற்றும் செல்லப் பிராணிகள் கண்காட்சி நடைபெற்றது.
கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநர் ரவிசந்திரன் தலைமை வகித்தார். இக் காண்காட்சியில் டாபர்மேன், கிரேடின், குமரேனியன், காகஸ்பேனியல், டேஷன், லேபர்டார், பக், கோம்பை, சைபிரியன் அஸ்கி, புள்ளிபுட்டா, டெரியர் வகை நாய்கள் காட்சிக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. மேலும், மாவட்டக் காவல் துறை, தென்னக ரயில்வே துறையிலிருந்து நாய்கள் கண்காட்சிக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. குதிரைகள், ஆடுகள், பூனைகளும் காட்சிக்கு கொண்டு வந்திருந்தனர். சிறந்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்காடு செல்வம், சுரேஷ்பாபு, தமிழ்ச்செல்வி, ஏ.சி. குமார் ஆகியோர் பரிசு பெற்றனர். மேலும் பங்கு பெற்ற அனைத்து செல்லப் பிராணி உரிமையாளர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மேலும் விழாவில் அரிக்கன் பெட்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது.
இக் கண்காட்சியில் ரஷ்யாவில் பனிப் பிரதேச நாடுகளில் வளர்க்கப்படும் சைபிரியன் அஸ்கி என்னும் வகை நாய் ஏற்காடு மோகனாடு காபி எஸ்டேட் உரிமையாளர் சார்பில் கண்காட்சிக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com