சங்ககிரியில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 5-ஆவது மாவட்ட மாநாடு

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சேலம் மாவட்ட மாநாடு சங்ககிரி புதிய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமைநடைபெற்றது.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சேலம் மாவட்ட மாநாடு சங்ககிரி புதிய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமைநடைபெற்றது.
மாநாட்டுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.கே.வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பி.மாதேஸ்வரன் மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்து, வரவு - செலவு அறிக்கையை தாக்கல் செய்தார்.
மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் வழக்குரைஞர் ஆர்.ராமசாமி வரவேற்றார். மாவட்டச் செயலர் ஜி.கணபதி வேலை அறிக்கையை வாசித்தார். அச் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் வீ.அமிர்தலிங்கம் பேசியது:
வறட்சியின் காரணமாக விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வேலையில்லாமல் சிரமப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் இயந்திரங்களை வைத்து மத்திய, மாநில அரசுகள் வேலைகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும், கூலித் தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கி, இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், ஊராட்சிகளில் உள்ளது போல் பேரூராட்சி பகுதிகளிலும் மத்திய அரசு நூறு நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றார்.
மாநாட்டில் மாநில துணைத் தலைவர் சி.துரைசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் பி.ராமமூர்த்தி, சிஐடியூ மாவட்டச் செயலர் டி.உதயகுமார், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் ஏ.ராமமூர்த்தி, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சங்ககிரி வட்டச் செயலர் எஸ்.கே.சேகர் ஆகியோர் பேசினர்.
இதில் சங்க நிர்வாகிகள் எம்.சின்னராஜ், இல.கலைமணி, பி.சாமியப்பன், எ.அருணாசலம், இ.அமுதா, கே.லதா, வி.வெங்கடாசலம், ஆர்.பழனிசாமி, சங்ககிரி அரசு ஊழியர்கள் சங்க வட்டச் செயலர் கே.ஏ.பசுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டு வரவேற்புக்குழு செயலர் டி.செந்தில்குமார் நன்றி கூறினார்.
ஆண்டுக்கு 200 நாள்கள் வேலை கொடுக்க வேண்டும், வறட்சி காலத்தில் 150 நாள் வேலை வழங்க வேண்டும், தமிழகம் முழுவதும் உள்ள 528 பேரூராட்சி பகுதி மக்களுக்கும் நூறு நாள் வேலை வழங்க வேண்டும், சேலம் மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு மனை நிலம், பட்டா, தொகுப்பு வீடு, பசுமை வீடுகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு
மாவட்டத் தலைவராக வி.தங்கவேல், செயலராக ஜி.கணபதி, பொருளாளர் பி.மாதேஸ்வரன், துணைத் தலைவர்களாக எம்.சின்ராஜ், கே.லதா, சி.எஸ்.பழனியப்பன், துணைச் செயலர்களாக கே.பெருமாள், பி.செந்தில்குமார், பி.சாமியப்பன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com