சோனா கல்லூரி மகளிர் தொழில்நுட்பப் பூங்காவில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் அளிப்பு

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள மகளிர் தொழில்நுட்பப் பூங்கா மூலம் தொழில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள மகளிர் தொழில்நுட்பப் பூங்கா மூலம் தொழில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து கிராமப்புற பெண்களுக்கு பயிற்சியளிப்பதற்காக சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் மகளிர் தொழில்நுட்பப் பூங்கா நிறுவப்பட்டுள்ளது.இங்கு சோலார் உணவுப் பதப்படுத்துதல், வெள்ளி கொலுசு தயாரித்தல், மாறுபட்ட பெண்மணிகளுக்கு தையல் இயந்திரம் போன்ற தொழில் நுட்பங்களில் கிராமப்புற பெண்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் இணை ஆராய்ச்சியாளர் டி.ராஜா மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் தையல் இயந்திரத்தை வடிவமைத்துள்ளார். இந்த தையல் இயந்திரத்தை, மாற்றுத்திறனாளிகள் எளிதாக இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.இதனிடையே, மகளிர் தொழில்நுட்பப் பூங்கா மூலம் பயிற்சி பெற்ற முதல் குழுவினருக்கு நிறைவு விழா நடைபெற்றது.
இதில் சோனா கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா தலைமையேற்று, சான்றிதழ்களை வழங்கினார். சோனா கல்லூரி முதல்வர் செந்தில் குமார் மற்றும் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பிரகாஷ் ஆகியோர் பேசினர். இந்தத் திட்டத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மக்கள் நேரடியாக வளாகத்தில் குழுவை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com