ஆத்தூர் திரெளபதி அம்மன் ஆலயத்தில் பகாசூரவதம், துகில் தருதல்

ஆத்தூர் திரெளபதி அம்மன் ஆலயத்தில் பகாசூரவதம் மற்றும் துகில் தருதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆத்தூர் திரெளபதி அம்மன் ஆலயத்தில் பகாசூரவதம் மற்றும் துகில் தருதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூர் அருள்தரும் திரெளபதி அம்மன் ஆலயத்தில் காலை 9 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து,தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, துளுவ வேளாளர் மகாஜன மன்றத்தின் தலைவர் எஸ்.அருணாசலம்,திருப்பணிக் குழுத் தலைவர் ஆர்.வசந்தன்,செயலாளர் ஏ.திருநாவுக்கரசு,அறங்காவலர்கள் மற்றும் பெரியதனக்காரர்கள், ஊர் முக்கியஸ்தர்களை தீமிதிப் பெருவிழா மற்றும் திருத்தேர் விழாவுக்கு அழைத்து வந்தனர்.இதையடுத்து, பகாசூரம் பீமன் மங்கல முனிக்கு சோறு கொடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பகாசூரன் மாட்டு வண்டியில் தேரோடும் வீதிகள் வழியாக தீக்குழி மைதானத்துக்கு செல்வார். அதைத்தொடர்ந்து பீமன் மாட்டு வண்டியில் பகாசூரனுக்கு சோறு எடுத்துச் செல்வார். ஆனால் பகாசூரனுக்கு சோற்றை கொடுக்காமல் பீமனே சாப்பிட ஆரம்பிக்க பகாசூரனுக்கு கோபம் வந்து பீமனைத் தாக்க, இருவருக்கும் சண்டை மூண்டு பீமன் பகாசூரனை வதம்
செய்கிறார். இதைத்தொடர்ந்து, பீமன் தானே சாதத்தை சாப்பிட்டு விட்டு பொதுமக்களுக்கும் கொடுக்கிறார். இந்த நிகழ்ச்சியை பீமராஜா நண்பர்கள் குழுவைச் சேர்ந்த கே.ராஜன்-விஜயா,கே.பி.மாதேஸ்வரன்-உமாமகேஸ்வரி,ஜி.பாண்டியன்-தமிழ்ச்செல்வி உள்ளிட்ட ஏராளமானோர் சிறப்பாக செய்திருந்தனர். இதையடுத்து, மாலை அம்மன் துகில் தருதல் நிகழ்ச்சி வசிஷ்ட நதியில் உள்ள அக்னிக்குழி மேடையில் நாடகக் குழுவினர் நிகழ்ச்சியை நடத்தினார்கள். பின்னர் 3 சிறிய தேர்களில் சுவாமிகள் விநாயகர்,கிருஷ்ணன்,திரெளபதிஅம்மன் ஆகியோர் தேரோடும் வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.
நிகழ்ச்சியை ஆத்தூர்துளுவ வேளாளர் மகாஜன மன்றத் தலைவர் எஸ்.அருணாசலம்,செயலாளர் ஏ.திருநாவுக்கரசு,திருப் பணிக் குழுத் தலைவர் ஆர்.வசந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com