எஸ்எஸ்எல்சி: சங்ககிரி கல்வி மாவட்டத்தில் 95 சதவீதம் பேர் தேர்ச்சி

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் சங்ககிரி கல்வி மாவட்டத்தில் 95 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் சங்ககிரி கல்வி மாவட்டத்தில் 95 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சங்ககிரி கல்வி மாவட்டத்தில் சங்ககிரி, எடப்பாடி, ஓமலூர், காடையாம்பட்டி ஆகிய வட்டங்களைச் சேர்ந்த 113 அரசுப் பள்ளிகள், 8 அரசு உதவிபெறும் பள்ளிகள், 12 தனியார் பள்ளிகள், 71 மெட்ரிகுலேசன் பள்ளிகளில் இருந்து 9023 மாணவர்களும், 8178 மாணவிகளும் தேர்வு எழுதினர். அதில் 8297 மாணவர்களும், 8178 மாணவிகளும் மொத்தம் 16475 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதத்தில் 9 பேரும், அறிவியல் பாடத்தில் 19 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 111 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மகுடஞ்சாவடி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கொங்கணாபுரம், மாதிரிப் பள்ளிகள் காடையாம்பட்டி, கொளத்தூர், மகுடஞ்சாவடி, எடப்பாடி, அரசு மேல்நிலைப் பள்ளிகள் குண்டுக்கல், பெரியகாடம்பட்டி, நீதிபுரம், மாதையன்குட்டை, கோனூர், குஞ்சாண்டியூர், வடுகப்பட்டி, சேலம்கேம், அக்கமாபேட்டை, கச்சுப்பள்ளி, கன்னியாம்பட்டி, சின்னசோரகை, பாகல்பட்டி, கோரணம்பட்டி, நெடுங்குளம், எம்.என்.பட்டி, ராமன்பட்டி, ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப் பள்ளி, கொளத்தூர் நிர்மலா மேல்நிலைப் பள்ளி,மேட்டூர்அணை செயின்ட் மேரீஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளி, சின்னதண்டா ஸ்ரீ ராமகிருஷ்ணா குருகுல உயர்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட 27 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
தமிழ்ப் பாடத்தில் 476, ஆங்கிலத்தில் 447, கணிதத்தில் 692, அறிவியல் 90, சமூக அறிவியல் 436 பேரும் தேர்ச்சி பெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com