சேலம் மண்டலத்தில் 13 புதிய பேருந்து சேவை தொடக்கம்

சேலம் மண்டலத்தில் 13 புதிய பேருந்துகளை ஆட்சியர், எம்.பி. எம்.எல்.ஏ-க்கள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சேலம் மண்டலத்தில் 13 புதிய பேருந்துகளை ஆட்சியர், எம்.பி. எம்.எல்.ஏ-க்கள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் அக்.10 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் மண்டலத்துக்கான 20 புதிய பேருந்துகளும், தருமபுரி மண்டலத்துக்கான 27 புதிய பேருந்துகளுமாக  மொத்தம் 47 புதிய பேருந்துகளை இயக்கி வைத்தார். 
அதைத்தொடர்ந்து சேலம் புதிய பேருந்து நிலையத்தில் சேலம் மண்டலத்துக்கான 13 பேருந்துகள் நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது. 
இப் புதிய பேருந்துகள் சேலத்தில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னை வரையிலும், செந்தாரப்பட்டியிலிருந்து விழுப்புரம் வழியாக சென்னை வரையிலும், எடப்பாடியிலிருந்து ஜலகண்டாபுரம் வழியாக பெங்களூர் வரையிலும், எடப்பாடியிலிருந்து கும்பகோணம் வரையிலும், சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக கோவை வரையிலும், கடத்தூரிலிருந்து திருப்பூர் வரையிலும், சேலத்திலிருந்து திருப்பூர் வரை 2 பேருந்துகளும், நங்கவள்ளியிலிருந்து கோவை வரையிலும், சேலத்தில் இருந்து கரூர் வரையிலும், திருச்செங்கோட்டிலிருந்து சேலம் வழியாக பெங்களூரு வரையிலும் இயக்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் எம்.பி. வி.பன்னீர்செல்வம், எம்எல்ஏ-க்கள் ஜி.வெங்கடாஜலம், ஏ.பி.சக்திவேல், பி.மனோன்மணி, ஆர்.எம்.சின்னதம்பி, அ.மருதமுத்து, கு.சித்ரா, அண்ணா தொழிற்சங்க செயலாளர் சென்னகிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்க தலைவர் நல்லப்பன், அரசு போக்குவரத்துக்கழகம் சேலம் கோட்டம் மேலாண் இயக்குநர் வி.அரவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com