ஒருக்காமலையில் புரட்டாசி வழிபாடு

புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சங்ககிரி அருகே ஒருக்காமலை அருள்மிகு வரதராஜ பெருமாள் குடவறை

புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சங்ககிரி அருகே ஒருக்காமலை அருள்மிகு வரதராஜ பெருமாள் குடவறை கோயிலில் பக்தர்கள் அதிகம்பேர் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஒருக்காமலை மீது ஒரு குன்றில் பெருமாளின் திருநாமமான சங்கு மற்றும் சக்கரம் மட்டுமே உள்ளன. இதனையே பக்தர்கள் காலம் காலமாக வழிபட்டு வருகின்றனர். புரட்டாசி மாத 4-ஆவது வார சனிக்கிழமையொட்டி சுவாமியின் திருநாமங்களுக்கு அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சங்ககிரி சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் அதிகாலையிலேயே மலைக்குச் சென்று சுவாமியை தரிசித்தனர்.
மேலும் அதிகமான பக்தர்கள் மலைக்கு வந்து குடும்பத்துடன் பொங்கல் வைத்து ஐந்து வகை காய்கறிகளைப் படைத்து வழிபட்டனர். மாலையில் திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டது. கோயிலுக்கு கொங்கணாபுரம், சேலம் வழியாக இரண்டு வழித்தடங்களிலும் அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com