சுகாதாரம், வேளாண்மைத் துறைகளில் தமிழகம் தொடர்ந்து சாதனை: முதல்வர்

இந்தியாவிலேயே சுகாதாரம், வேளாண்மை ஆகிய துறைகளில் தமிழகம் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். 

இந்தியாவிலேயே சுகாதாரம், வேளாண்மை ஆகிய துறைகளில் தமிழகம் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். 
சேலம் மாவட்டம்,  வீரபாண்டி ஒன்றியம்,  பூலாவரியில் அ.தி.மு.க.வின் 47-ஆவது ஆண்டு தொடக்க விழா சட்டப்பேரவை உறுப்பினர் பி. மனோன்மணி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  
மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர். இளங்கோவன் வரவேற்றார்.  70 அடி உயர கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஏற்றி வைத்தார்.  
பின்னர்,  பயனாளிகளுக்கு தையல் இயந்திரம்,  மூன்று சக்கர வாகனம்,  வேட்டி, சேலை,  சலவைப் பெட்டி உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.  பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 500-க்கும் மேற்பட்டோர் முதல்வர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை முதல்வர் சால்வை அணிவித்து வரவேற்றார். 
     பின்னர், முதல்வர் பேசியது:  இந்தியாவிலேயே சுகாதாரம், வேளாண்மை ஆகிய துறைகளில் தமிழகம் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது.  தமிழகத்தில்தான் அதிக அளவில் ஏழை,  எளிய மக்களுக்கான அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.  அ.தி.மு.க.வில்தான் சாதாரண தொண்டன்கூட என்னைப் போல முதல்வராகவும்,   தலைவராகவும் வர வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. 
தமிழகத்தில் 1 கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசின் விலையில்லா மிக்ஸி,  கிரைண்டர் வழங்கப்பட்டுள்ளது.  36 லட்சம் மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 15 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.  அ.தி.மு.க.வில் மட்டும் 1.50 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.   இளைஞர்கள் - இளம்பெண்கள் பாசறைக்கு உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.  ஊழல்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்படி தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.   சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரியானூர்,  மகுடஞ்சாவடி ஆகிய பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட தலா ரூ. 45 கோடியில் டெண்டர் விடப்பட்டுள்ளது.  வீரபாண்டி பகுதிக்கு காவிரிக் குடிநீருக்கான தனித் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்றார். 
இந்த நிகழ்ச்சியில், சேலம் எம்.பி. வி.பன்னீர்செல்வம்,  எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாசலம்,  செம்மலை,  சித்ரா , ராஜா,  ஒன்றியச் செயலாளர்கள் எஸ். வரதராஜ்,  டி. என். வையாபுரி  கே ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com