பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் 115 பேர் கைது

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் 115 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் 115 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி, சேலத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி தலைமையில் மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
இதில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ஏ.மோகன், சிபிஐ (எம்எல்) மாவட்ட செயலாளர் கோ.மோகனசுந்தரம், சோசலிஸ்ட் யூனிடி சென்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்ட்) மாவட்ட குழு நிர்வாகி ஆர்.நடராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல், டீசல் விலையைத் திரும்பப் பெறக் கோரி மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர்.  போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், அவர்களை கலைந்து போகுமாறு போலீஸார் அறிவுறுத்தினர்.
அப்போதும் கலைந்து போகாததால், மறியலில் ஈடுபட்ட 115 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.  கைதானவர்கள் மாலையில் விடுவிக்கப்படுவார்கள் என போலீஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் பி.ராமமூர்த்தி கூறுகையில்,  பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஆனால் விலையைக் குறைக்காத மத்திய அரசு வெளிநாட்டுக்கு குறைந்த விலையில் பெட்ரோல்,  டீசலை ஏற்றுமதி செய்கிறது என்றார்.
ஆட்டோக்கள், லாரிகள் நிறுத்தம்...:
மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சேலம் மாவட்டத்தில் 35 ஆயிரம் லாரிகள் இயக்கப்படவில்லை.   இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் சேலம் மாவட்டத்தில் எந்த பாதிப்பும் இல்லை. சேலத்தில் உள்ள முக்கிய வணிகப் பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் செயல்பட்டன.  பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. ஆட்டோக்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டன.   மாவட்டத்தில் ஆட்டோக்கள், லாரிகள் சுமார் 75 சதவீத அளவுக்கு இயங்கவில்லை.  மாறாக,  எந்தவித அசாம்பாவித சம்பவமும் நிகழவில்லை என்று போலீஸ் தகவல்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com