தூய்மை பிரசாரம் இன்று  துவக்கம்

சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட அனைத்து ரயில் நிலையங்களில் தூய்மை பிரசாரம் சனிக்கிழமை (செப். 15) காலை 9.30 மணிக்கு துவங்குகிறது.

சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட அனைத்து ரயில் நிலையங்களில் தூய்மை பிரசாரம் சனிக்கிழமை (செப். 15) காலை 9.30 மணிக்கு துவங்குகிறது.
இதுகுறித்து கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் கூறியதாவது:-
இந்திய ரயில்வே ''ஸ்வச் பாரத்'' திட்டத்தை செயல்படுத்துவதில் முன்னோடியாக உள்ளது.  2014-ஆம் ஆண்டு அக்டோபர் 2-இல் தொடங்கிய தூய்மை பிரசாரத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், "ஸ்வச்ச ஹாய் சேவா-பக்வாரா" 2018' -இன்படி இந்திய ரயில்வே செப்டம்பர் 15- ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2 ஆம் தேதி வரை மிகப்பெரிய அளவிலான தூய்மைப் பிரசாரத்தை மேற்கொள்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு கருப்பொருளில் தூய்மை பணிகள் செய்யப்படும்.
இந்தவகையில் செப்டம்பர் 15-இல் துவங்கும் தூய்மை பிரசாரத்தில் ரயில்வே ஊழியர்கள், துப்புரவு ஊழியர்கள் உறுதிமொழியை ஏற்கின்றனர். 
ரயில்வே ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தங்கள் வாழ்விடத்தின் அருகே சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  மேலும் தன்னார்வ நிறுவனங்கள், சமய அமைப்புகள், சமூக அமைப்புகள் உள்ளிட்டவை மூலம் கருத்துப்பட்டறைகள், பயிலரங்குகள் மூலம் தூய்மை பிரசாரம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி நடத்தப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com