லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் திருப்பணி தொடக்கம்

மேட்டூர் அருகே நங்கவள்ளியில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி,   சோமேஸ்வர சுவாமி கோயில்களில்  திருப்பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மேட்டூர் அருகே நங்கவள்ளியில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி,   சோமேஸ்வர சுவாமி கோயில்களில்  திருப்பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கோயிலில் ராஜ கோபுரம், மகா மண்டபும், விஸ்வச்சேனர் சன்னிதி, ஆண்டாள் சன்னிதி, மேற்கு கோபுரம், சொர்க்கவாசல், கருடன் சன்னிதி, மூலவர் விமானம், சபாமண்டபம் உட்பட 25 பணிகள் ரூ.1.50 கோடியில் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  இதில் ஆலயத்தின் சுற்றுபிரகாரத்துக்கு ரூ.20 லட்சத்தில் கல்பதிக்கும் பணிக்கு பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்படுகிறது. மற்றபணிகள் நன்கொடையாளர்கள் மூலம் செய்யப்படுகிறது. 
இதற்கான கால்கோல் விழா கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.   திருப்பணிக் குழுத் தலைவரும், வீரக்கல் புதூர் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவருமான எமரால்டு வெங்கடாசலம்,  செயலர் கே.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com