சேலம்-மேட்டூர் இரட்டை ரயில் பாதை பணி: அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும்

சேலம்- மேட்டூர் இடையே அமைக்கப்பட்டு வரும் இரட்டை ரயில் பாதை பணி வரும் 2019 மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் யு. சுப்பாராவ் தெரிவித்தார். நாடு முழுவதும் அக்டோபர் 2-ஆம்

சேலம்- மேட்டூர் இடையே அமைக்கப்பட்டு வரும் இரட்டை ரயில் பாதை பணி வரும் 2019 மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் யு. சுப்பாராவ் தெரிவித்தார்.
நாடு முழுவதும் அக்டோபர் 2-ஆம் தேதி தூய்மை இந்தியா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் ஸ்வச்ச ஹாய் சேவா பக்வாரா-2018' என்ற தூய்மை பிரசாரம் 15 நாள்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது.
சேலம் ரயில் நிலையத்தில் தூய்மை பிரசாரத்தை, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் யு. சுப்பாராவ் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
தூய்மையை வலியுறுத்தும் பேரணியைத் தொடக்கி வைத்த அவர், ரயில் நிலையத்திலிருந்த பயணிகளிடம் தூய்மையைப் பேணிக் காப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் துண்டு பிரசுரங்களை வழங்கினார். பேரணியில் முதுநிலை வணிக மேலாளர் விஜுவின், முதன்மை இயந்திரவியல் பொறியாளர் முத்துகுமார், நிலைய மேலாளர் கவுரி சங்கர், முதன்மை வணிக ஆய்வாளர் விக்ரமன் உள்ளிட்ட அதிகாரிகள், ரயில்வே ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் பங்கேற்றனர்.
சிறப்பாகப் பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள் 30 பேருக்கு தலா ரூ. 200 ரொக்கப் பரிசாக கோட்ட மேலாளர் யு. சுப்பாராவ் வழங்கினார்.
இதுதொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி வரை 15 தினங்களுக்கு தூய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பதுதான் இதன் நோக்கமாகும். சேலம்- மேட்டூர் இடையே அமைக்கப்பட்டு வரும் இரட்டை ரயில் பாதை பணி வரும் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும். பணியை விரைந்து முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் இரட்டை ரயில் பாதை பணி முடிவடைந்தால், மேட்டூர் அனல்மின் நிலைத்துக்குத் தேவையான நிலக்கரியை எளிதாகக் கொண்டு செல்ல முடியும். இதற்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னரே மத்திய ரயில்வே அமைச்சகம், திட்டம் அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்தது.
சேலம் ரயில் நிலைய 2-ஆவது நுழைவு வாயில் பகுதியில் பயணிகள் சுரங்கப்பாதை, அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு வாகனம் நிறுத்தும் இடம் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சேலம்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த பரிந்துரையை தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com