சின்னாளபட்டியில் மாநில ஹேண்ட்பால் போட்டி: 32 அணிகள் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் நடந்து வரும் மாநில அளவிலான ஹேண்ட்பால் போட்டியில், தமிழகம் முழுவதிலுமிருந்து 32 அணிகள் பங்கேற்றுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் நடந்து வரும் மாநில அளவிலான ஹேண்ட்பால் போட்டியில், தமிழகம் முழுவதிலுமிருந்து 32 அணிகள் பங்கேற்றுள்ளன.

தங்கராஜ் நினைவு கோப்பைக்கான மாநில அளவிலான ஹேண்ட்பால் போட்டி, சின்னாளப்பட்டி சேரவன் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கியது. இதில், 19 வயதுக்குள்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கொண்ட 32 மாவட்ட அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டிகளில், முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும். தூத்துக்குடி மற்றும் சிவகங்கை அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியை, சென்னை மண்டல காவல்துறைத் தலைவரும், ஹேண்ட்பால் சங்கத்தின் மாநிலத் தலைவருமான எம். ராமசுப்பிரமணி தொடக்கி வைத்தார்.

இந் நிகழ்ச்சியில், ஹேண்ட்பால் சங்கத்தின் மாநிலச் செயலர் ஏ. சரவணன், திண்டுக்கல் மாவட்டச் செயலர் சிவக்குமார், சேரன் பள்ளி முதல்வர் என். திலகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முதல் நாள் ஆட்டத்தில், 30-6 என்ற கோல் கணக்கில் சிவகங்கை அணியை தூத்துக்குடி அணி வீழ்த்தியது. வேலூர் அணியை 4-8 என்ற கோல்களில் மதுரை அணியும், நாகப்பட்டினம் அணியை 5-18 என்ற கோல்களில் ஈரோடு அணியும், கன்னியாகுமரி அணியை 3-19 என்ற கோல்களில் கிருஷ்ணகிரி அணியும், கடலூர் அணியை 11-19 என்ற கோல்களில் விழுப்புரம் அணியும், நீலகிரி அணியை 14-19 என்ற கோல்களில் காஞ்சிபுரம் அணியும், தேனி அணியை 13-27 என்ற கோல்களில் திருவள்ளூர் அணியும், விருதுநகர் அணியை 14-21 என்ற கோல்களில் அரியலூர் அணியும், திருப்பூர் அணியை 3-15 என்ற கோல்களில் சென்னை அணியும் வீழ்த்தி, அடுத்துச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com