உருளை, பீன்ஸ் செடிகளில் பூச்சித் தாக்குதல்: விவசாயிகள் கவலை

கொடைக்கானலில் உருளை, பீன்ஸ் செடிகளில் வெள்ளைப் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது
உருளை, பீன்ஸ் செடிகளில் பூச்சித் தாக்குதல்: விவசாயிகள் கவலை

கொடைக்கானலில் உருளை, பீன்ஸ் செடிகளில் வெள்ளைப் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

  கொடைக்கானலில் பொதுவாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மழை பெய்வது வழக்கம். இந்த மழையை நம்பி கொடைக்கானல் பகுதிகளான வில்பட்டி, அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை, செண்பகனூர்,பிரகாசபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உருளைக் கிழங்கு, பீன்ஸ், பீட்ரூட், உள்ளிட்ட பல்வேறு வகையான மலைப் பயிர்கள் பயிரிடப்பட்டன. ஆனால் மழை குறைவாக இருந்ததால் விளைச்சல் குறைவாக இருந்தது.

  மேலும் விவசாயப் பயிர்களில் வெள்ளைப் பூச்சித்தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் செடிகள் அழுகி விடுகின்றன.

 பல்வேறு விதமான பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளித்தாலும் பூச்சிகள் குறையவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து வெள்ளைப் பூச்சித் தாக்குதல் இருந்து வருவதால் விவசாயம் பாதிப்படைந்து, விவசாயிகளும் கவலையடைந்துள்ளனர்.

  இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கொடைக்கானலில் இந்தாண்டு பருவ மழை வெகுவாக குறைந்துள்ளதால் விவசாயப் பயிர்களில் வெள்ளைப் பூச்சித் தாக்குதல் இருந்து வருகிறது. இந்தப் பூச்சிகள் செடிகளின் அடியில் தங்குவதால் பூச்சி மருந்துகள் தெளித்தாலும் அவைகளுக்கு பாதிப்பில்லை. ஆனால் செடிகளில் மஞ்சள் துணியில் விளக்கு எண்ணெய் தடவிக் கட்டினால் வெள்ளைப் பூச்சிகள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. காற்றுடன் பலத்த மழை பெய்தால் மட்டுமே இவை அழியும் என்றார்.

  இது குறித்து கொடைக்கானல் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: கொடைக்கானலில் பருவ மழை குறைந்த காரணத்தால் வெள்ளைப் பூச்சி அதிகமாகி விவசாயப் பயிர்களில் தாக்கியதால் உருளை, பீன்ஸ் போன்ற பயிர்கள் பாதிப்படைந்து வருகிறது. மழைக்காக கோயில்களில் வழிபாடு நடத்தி வருகின்றோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com