கொடைக்கானலில் மேலும் ஒரு பூங்காவில் குறிஞ்சிப் பூ

கொடைக்கானலில் செட்டியார் பூங்காவில் பூத்துள்ள அரிய வகை குறிஞ்சி மலர்களை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்கின்றனர்.
கொடைக்கானலில் மேலும் ஒரு பூங்காவில் குறிஞ்சிப் பூ

கொடைக்கானலில் செட்டியார் பூங்காவில் பூத்துள்ள அரிய வகை குறிஞ்சி மலர்களை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்கின்றனர்.

  கொடைக்கானல் மலைப் பகுதிகளான பி.எல்.செட், கோக்கர்ஸ் வாக், பெருமாள்மலை மற்றும் கொடைக்கானல்- வத்தலக்குண்டு- பழனி மலைச் சாலைகளில் குறிஞ்சி மலர் செடிகள் வளர்ந்துள்ளன. குறிஞ்சிப் பூவானது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும். கடந்த 2006-ஆம் ஆண்டு கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் குறிஞ்சி பூத்துக் குலுங்கியது.

அதன்பின், கொடைக்கானல் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டும் குறிஞ்சி பூ பூத்துக் காணப்பட்டது.

  கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ்வாக், செட்டியார் பூங்கா, சிட்டி வியூ ஆகிய இடங்களில் குறிஞ்சி செடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் கடந்த 20 நாள்களுக்கு முன் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வளர்க்கப்படும் குறிஞ்சி செடியில் குறிஞ்சிப் பூ பூத்தது. தற்போது தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான தாவரவியல் பூங்காவான செட்டியார் பூங்காவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் வளர்க்கப்பட்டு வந்த குறிஞ்சி செடியில் நீலக் கலரில் பூ பூத்துள்ளது. இவற்றை இந்தப் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் பார்த்து வருகின்றனர்.

  இது குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் மோகன்குமார் கூறியதாவது:

  கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிரையண்ட் பூங்காவிலுள்ள குறிஞ்சி பூவை பார்த்து ரசித்து வருகின்றனர். தற்போது செட்டியார் பூங்காவிலும் குறிஞ்சி பூ பூத்துள்ளதால் அதிகமான சுற்றுலாப் பயணிகள் பார்க்க வருவார்கள் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com