இணையதளத்தில் பத்திரம் பதிய பயிற்சி வகுப்பு

மதுரை மண்டல பத்திரப்பதிவுத்துறை சார்பில் ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் மூலம் கணினி வழி இணையதள பத்திரப்பதிவு குறித்த பயிற்சி வகுப்பு பழனி மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை மண்டல பத்திரப்பதிவுத்துறை சார்பில் ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் மூலம் கணினி வழி இணையதள பத்திரப்பதிவு குறித்த பயிற்சி வகுப்பு பழனி மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் மாவட்டப் பதிவாளர் அருள்ஜோதி வரவேற்றார். உதவிப் பதிவுத்துறைத் தலைவர் ரவிச்சந்திரன்,  மாவட்டப் பதிவாளர் ஜாலிவாடீஸ்வரி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.  மதுரை மண்டல துணைப் பதிவுத்துறைத் தலைவர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: பத்திரப் பதிவை விரைவுபடுத்தவும், மக்கள் நீண்டநேரம் காத்திருப்பதை தவிர்க்கவுமே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
 இதன் மூலம் சேமிக்கும் தகவல்கள் சென்னை மற்றும் புனேயில் உள்ள மத்திய தகவல் மையத்தில் உடனுக்குடன் சேமிக்கப்படுவதால் போலி பத்திரம் போன்ற முறைகேடுகள் தவிர்க்கப்படும். தவிர ஒருவர் எந்த ஊரில் வேண்டுமானாலும் தங்களது சொத்தை பதிவு செய்யலாம். வேறு யாரேனும் ஒருவர் சொத்தை பதிவு செய்ய முயன்றால் முன்னரே பதிவு செய்த நபருக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கும் வசதி போன்ற பல நன்மைகள் இந்த மென்பொருளில் உள்ளது. தற்போது மதுரை மண்டலத்தில் 9 மாவட்டப் பதிவாளர் அலுவலகம், 102 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆண்டுக்கு 4 லட்சத்துக்கு மேல் ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன என்றார். நிகழ்ச்சியில் பத்திரப்பதிவுத்துறை அலுவலர்கள், பத்திர எழுத்தர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com