கொடைக்கானலில் பேரிக்காய் விளைச்சல் அதிகரிப்பு

கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் பேரிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது.

கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் பேரிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது.
 இந்த தொடர் மழையால் அங்குள்ள நீரோடைகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இந்த மழை உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், நூக்கல்,  முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்ற பயிர்களுக்கு ஏற்றதாக இருப்பதால் அவற்றின் விளைச்சல் அமோகமாக இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
அதே போல் கொடைக்கானல், பிரகாசபுரம், அட்டக்கடி, இருதயபுரம், செண்பகனூர், வில்பட்டி,  மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் பேரிக்காய்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது.
அவற்றை எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன் பேரிக்காய் எடுக்கும் போது அவற்றின் தரம் சற்று குறைந்து காணப்பட்டது. தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் அதன் விளைச்சலும், தரமும் கூடுதலாக இருக்கும் எனவிவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தினமும் பரவலாக பெய்து வரும் மழையால் புறநகர்ப் பகுதிகளில் நிலவி வந்த தண்ணீர் தட்டுப்பாடு சற்று குறைந்துள்ளது. ஏரி மற்றும் குடிநீர்த் தேக்கத்தில் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com