கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் காய்கறிகள் விற்பனை

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் விற்கப்படும் காய்கறிகளை சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் விற்கப்படும் காய்கறிகளை சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
 இப்பூங்காவில் மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி,  நூக்கல், மலை வாழை, அவக்கோடா, பேஷன் புரூட்  ஆகியவை விற்கப்படுகின்றன. இவற்றை இப்பூங்காவை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் செல்கின்றனர்.  குறைந்த விலையில், தரமான காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைப்பதால் அவற்றை சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்குகின்றனர். இதுகுறித்து மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள் கூறும் போது, இங்கு மலைப் பகுதிகளில் விளையும் காய்கறிகள் மற்றும் பழவகைகளை குறைந்த விலைக்கு விற்கிறோம். மகளிர் சுய உதவிக்குழுக்கள் முன்னேற்றமடையும் வகையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இவை விற்கப்படுகின்றன என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com