பரப்பலாறு அணையில் மத்திய வனக்குழு ஆய்வு

ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையை தூர்வார மத்தியக் குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினர்.

ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையை தூர்வார மத்தியக் குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினர்.
  வடகாடு ஊராட்சியில் அமைந்துள்ள இந்த அணை ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன்,  பெருமாள்குளம், சடையன்குளம், முத்து பூபாலசமுத்திரக்குளம், செங்குளம் உள்ளிட்ட குளங்களும்,  திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 2300 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் கடந்த 42 ஆண்டுகளாக இந்த அணை தூர்வாரப்படாததால் வண்டல் மண் மற்றும் மணல் தேங்கி உள்ளது. இதையடுத்து அணையை தூர்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே இந்த அணை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதால், வனத்துறை அனுமதி அளித்தால் மட்டுமே மண் எடுக்க முடியும் என்ற சூழ்நிலை இருந்தது.
 அதன் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வனத்துறையினர் அனுமதிக்காக காத்திருந்தனர். இதையடுத்து வெள்ளிக்கிழமை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சுழல் அதிகாரி எம்.ஆர்.ஜி.ரெட்டி,  ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரிகள் கே.ஜேடிசேகர், சி.என்.ராவு தலைமையில் வந்த குழுவினர் பரப்பலாறு அணையில் உள்ள வண்டல் மண் மற்றும் மணல் இருக்கும் பகுதியை ஆய்வு செய்தனர். அப்போது மண்டல வன பாதுகாவலர் நாகநாதன், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ்,பொதுப்பணித்துறை அதிகாரிகள் சுப்பிரமணி, செல்வக்குமார், மெய்யழகன், தனசேகரன், வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயலட்சுமி, வேளாண்மை பொறியாளர் பிரிட்டோராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
 இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி கூறியதாவது: பரப்பலாறு அணையில் 26.71 ஹெக்டேரில் உள்ள வண்டல் மற்றும் மணல் எடுக்கவும், மண்ணை எடுத்து வெளியேற்ற 5 இடங்களில் பாதை அமைக்க வனத்துறையினரிடம் அனுமதி கேட்டோம். அதன் பேரில் மத்திய வனக்குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவு ஒரு சில தினங்களில் தெரியவரும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com