பழனி கோயிலில் தவில், நாதஸ்வர கலைஞர்களுக்கு5 ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை 5 ஆம் கட்டமாக தவில் மற்றும் நாதஸ்வரக் கலைஞர்களுக்கான மேம்பட்ட பயிற்சிப் பட்டறை தொடங்கியது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை 5 ஆம் கட்டமாக தவில் மற்றும் நாதஸ்வரக் கலைஞர்களுக்கான மேம்பட்ட பயிற்சிப் பட்டறை தொடங்கியது.
இதுவரை நடைபெற்று முடிந்த 4  கட்ட பயிற்சிப் பட்டறையில் நூற்றுக்கணக்கான தவில் மற்றும் நாதஸ்வரக் கலைஞர்கள் பயிற்சி பெற்று சென்றுள்ளனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை 5 ஆம் கட்டமாக பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.  பழனி கிரிவீதியில் உள்ள பழைய நாதஸ்வரம் மற்றும் தவில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பழனிக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தலைமை வகித்துப் பேசினார். தவில் ஆசிரியர் முத்துமாணிக்கம் வரவேற்றார். நாதஸ்வர வித்வான் ஏகேசி நடராஜன், தவில் வித்வான் தஞ்சை டிகே கோவிந்தராஜன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர். ஐந்தாம் கட்டமாக பயிற்சி பெறும் கலைஞர்களுக்கு  ஆக.14 ஆம் தேதி நிறைவுநாள் நிகழ்ச்சியில்   சான்றிதழ்களும்,  ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com