திண்டுக்கல்லில் அரசு மகளிர் பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும்: முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மகளிர் பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும் என முன்னாள் எம்எல்ஏவும், ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத் தலைவருமான கே.பாலபாரதி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மகளிர் பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும் என முன்னாள் எம்எல்ஏவும், ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத் தலைவருமான கே.பாலபாரதி தெரிவித்தார்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட மாநாடு மற்றும் கேபி.ஜானகியம்மாள் நூற்றாண்டு விழா வத்தலகுண்டுவில் சனிக்கிழமை தொடங்கியது. இதனையொட்டி வத்தலகுண்டு வானொலி திடலில் துவங்கிய பேரணி, காளியம்மன் கோவிலை சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஜானகி தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கே.பாலபாரதி கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திண்டுக்கல்லில் அரசு மகளிர் பொறியியல் கல்லூரி தொடங்கப்பட வேண்டும். சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின் நினைவாக வத்தலகுண்டுவில் மணி மண்டபம் கட்டப்பட வேண்டும்.
பல்வேறு நிலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 100 நாள் திட்ட பெண் பயனாளிகளுக்கு ரூ.205 ஊதியமாக வழங்கப்பட வேண்டும். ஆனால், தற்போது ரூ.140 மட்டுமே வழங்கப்படுகிறது. ஊராட்சிகளைப் போல், பேரூராட்சிப் பகுதிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
பெண்கள் மீது வன்முறையில் ஈடுபட்டவர்கள் தொடர்பான வழக்குகள் தற்போது வரையிலும் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் மீது துரிதமாக விசாரணை நடத்துவற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com