பழனி அருகே பொதுமக்கள் இணைந்து குளத்தை தூர்வாரும் பணி தொடக்கம்

பழனியை அடுத்த கீரனூரில் உள்ள ஆளாங்குளத்தை சனிக்கிழமை பொதுமக்கள் இணைந்து தூர்வாரும் பணியை மேற் கொண்டனர்.

பழனியை அடுத்த கீரனூரில் உள்ள ஆளாங்குளத்தை சனிக்கிழமை பொதுமக்கள் இணைந்து தூர்வாரும் பணியை மேற் கொண்டனர்.
இக்குளம் 40 ஆண்டுகளுக்கும் மேல் தூர்வாரப்படாதததால் மணல் மேடாகி மழைநீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கீரனூர் வளர்ச்சி சேவைக்குழு, கீரனூர் விவசாய சங்கம் மற்றும் கோவை கீரனூர் வட்டார சபை ஆகியவற்றுடன் பொதுமக்களும் இணைந்து தூர்வாரும் பணியை மேற்கொண்டனர். இதன் தொடக்க விழாவுக்கு கீரனூர் வளர்ச்சிக்குழு தலைவர் அம்ஜத் இப்ராகிம், கீரனூர் விவசாய சங்கத் தலைவர் முத்துச்சாமி, கோவை கீரனூர் வட்டார சபை தலைவர் சாதிக் அலி உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். கீரனூர் வளர்ச்சி சேவைக்குழு செயலர் அஹமது ரபீக், துணைச் செயலர் முருகேசன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். பழனி வருவாய்த்துறை வட்டாட்சியர் ராஜேந்திரன், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் கண்ணன் உள்ளிட்டோர் பணியை தொடக்கி வைத்தனர். 2 ஜேசிபி இயந்திரங்கள், 2 டிராக்டர்கள் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கீரனூர் வளர்ச்சி சேவைக் குழு செயலர் அஹமது ரபீக் கூறுகையில், அனைவரும் ஒன்றிணைந்து நிதி திரட்டி இக்குளத்தை தூர்வாரும் பணியை மேற்கொண்டுள்ளோம். மழை காலத்துக்கு முன் இப்பணியை முடித்து மழைநீரை சேமிப்பதே எங்கள் நோக்கம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com