சுதந்திர தினம்: பழனி மலைக் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தொடர் விடுமுறை காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.
இதனால், பழனி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப் கார், விஞ்ச் நிலையம் மற்றும் படிவழிப் பாதைகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. மலைக் கோயிலில் இலவச தரிசன வரிசை மற்றும் கட்டண தரிசன வரிசை என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அதிக கூட்டம் காரணமாக,  பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமார் 3 மணி நேரமானது.    மேலும், சுதந்திரதினத்தை முன்னிட்டு மலைக் கோயிலில் தங்ககோபுரம் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.  
மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப் கார், விஞ்ச் மற்றும் படிவழிகளில் டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர் நிறுவப்பட்டுள்ளது.  சந்தேகத்துக்கு இடமான நபர்களின்  உடைமைகள், ஹேண்ட் மெட்டல் டிடெக்டர் கொண்டு ஆய்வு செய்யப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை, திருக்கோயில் நிர்வாகம் மற்றும் பழனி காவல்துறை இணைந்து மேற்கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com