பழனி அருகே அனுமதியின்றி  மணல் அள்ளி வந்த  2 லாரிகள் பறிமுதல்

பழனியருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த இரு லாரிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பழனியருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த இரு லாரிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பழனியை அடுத்த பெரியம்மாபட்டி பகுதிகளில் அனுமதியின்றி லாரிகளில் மணல் அள்ளி செல்லப்படுவதாக வட்டாட்சியருக்கு வந்த புகாரைத் தொடர்ந்து வட்டாட்சியர் ராஜேந்திரன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் திங்கள்கிழமை அப்பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.  அப்போது அவ்வழியே வந்த டிப்பர் லாரி மற்றும் மினி லாரிகளில் மணல் ஏற்றி வந்த வாகன ஓட்டுநர்களிடம் அனுமதிச் சீட்டு கேட்டபோது இல்லாதது தெரியவந்தது.  இதையடுத்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு வரப்பட்டு அவற்றுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com