வாகரையில் உலக மண்வள தின விழா

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி நிலையத்தில் உலக மண்வள தினத்தை முன்னிட்டு ஆராய்ச்சி நிலையம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி நிலையத்தில் உலக மண்வள தினத்தை முன்னிட்டு ஆராய்ச்சி நிலையம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில் செவ்வாய்க்கிழமை சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.  
நிகழ்ச்சியை வட்டாட்சியர் ராஜேந்திரன் தொடக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மனோகரன் தலைமை வகித்தார்.  உதவி இயக்குநர் சுருளியப்பன் வரவேற்றார். 
உழவியல் முறையில் மண்வளப் பாதுகாப்பு, மண்வளப் பாதுகாப்பில் நுண்ணுயிர்களின் பங்கு, பல்வேறு வேளாண் பயிர்களுக்கான உரப்பரிந்துரை, மண் மாதிரி எடுத்து செயல்விளக்கம்,  மண் பரிசோதனையின் முக்கியத்துவம் போன்ற பல்வேறு தலைப்புகளில் பேராசிரியர்கள் உரை நிகழ்த்தினர். மண் வளத்தை பாதுகாக்கும் பொருட்டு இயற்கை உரங்களையே பயன்படுத்த வேண்டும், ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 
மேலும், மண்வளம் குறித்த அட்டையை பயன்படுத்தி விவசாய நிலங்களில் எந்த சத்து குறைபாடு உள்ளது எனக் கண்டறிந்து அதற்கேற்ப உரம், பயிர்களை பயன்படுத்தினால் நல்ல லாபம் ஈட்ட முடியும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக விவசாயிகளுக்கு மண் பரிசோதனை அட்டைகள் வழங்கப்பட்டது. கருத்தரங்க வளாகத்தில் இயற்கை உரம், பயிர்களுக்கு வேண்டிய நுண்ணூட்ட சத்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டது. 
மக்காச்சோள ஆராய்ச்சி நிலைய தலைவர் முனைவர் சேதுராமன், வேளாண் உதவி இயக்குநர்கள் மீனாகுமாரி, கதிரேசன் உள்ளிட்ட பேசினர். இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com