காந்தி கிராமப் பல்கலை.யில்  அடுத்த ஆண்டு சாந்தி சேனை பாடத்திட்டம்: துணைவேந்தர் தகவல்

காந்தி கிராம பல்கலைக்கழக மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு முதல்சாந்தி சேனை பாடத்திட்டம் கட்டாயமாக்கப்படும் என துணைவேந்தர் சு.நடராஜன் தெரிவித்தார்.

காந்தி கிராம பல்கலைக்கழக மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு முதல்சாந்தி சேனை பாடத்திட்டம் கட்டாயமாக்கப்படும் என துணைவேந்தர் சு.நடராஜன் தெரிவித்தார்.
   காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக காந்திய சிந்தனை மற்றும் அமைதியியல் துறை சார்பில், வியாழக்கிழமை நடைபெற்ற கொடிநாள் மற்றும் சமூக நல்லிணக்க தின விழாவில் அவர் பேசியதாவது:
   நாட்டில் சமூக ஒற்றுமை இல்லாத இடங்களில், அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்காக காந்தியடிகள் சாந்தி சேனை என்ற அமைப்பைத் தொடங்கினார். அவரது பெயரில் செயல்பட்டு வரும் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழம் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே, சாந்தி  சேனை அமைப்பு இங்கு செயல்பட்டு வருகிறது.
   இனி வரும் காலங்களில், பேரிடர் மேலாண்மை மற்றும் அமைதி ஆக்கம் குறித்து மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. 
  மாணவர்கள் சமூகப்பணியில் ஈடுபடுவதற்கு, தன்னார்வத் திறன்களை வளர்த்தெடுப்பதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன. 2018-19 கல்வியாண்டு முதல் சமூக நல்லிணக்கம், காந்தியம், சமூகப்பணி, அமைதி காத்தல் போன்ற பண்புகளை அனைத்து மாணவர்களுக்கும் கற்பிக்கும் வகையில், சாந்திசேனை என்ற பாடத்திட்டம் கட்டாயமாக்கப்படும் என்றார். 
    விழாவில் சமூக அறிவியல் புலத்தலைவர் குருசாமி, பேராசிரியர்கள் வி.ரகுபதி, ஆர்.மணி, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.கலாவதி ஆகியோர் கலந்து கொண்டனர். காந்திய சிந்தனைத் துறை தலைவர் எம்.மல்லம்மாள் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com