நூறு நாள் வேலை வழங்காததால் காவலப்பட்டியில் சாலை மறியல்

பழனி அருகே  நூறு நாள் வேலை வழங்கக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பழனி அருகே  நூறு நாள் வேலை வழங்கக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
   பழனியை அடுத்த காவலப்பட்டி ஊராட்சியில் ஊரக வேலை வாய்ப்புப் பணிகள் சித்தரேவு கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு நீண்ட நாள்களாக வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதுகுறித்து காவலப்பட்டி ஊராட்சி அலுவலரிடம் பலமுறை தெரிவித்தும் கண்டுகொள்ளப்படவில்லையாம்.  
   இந்நிலையில், வியாழக்கிழமை சித்தரேவு கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் காவலப்பட்டியில் இருந்து நெய்க்காரபட்டிக்கு செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கிராமசாலை என்பதால் பிரதான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படவில்லை. 
   எனினும் சம்பவ இடத்துக்கு கிராம நிர்வாக அலுவலர் செல்லத்துரை வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com