மலேசியாவில் இளைஞர் மர்மச் சாவு: சடலத்தை மீட்க கோரி தாய் மனு

மலேசியாவில் மர்மமான முறையில் உயிரிழந்த திண்டுக்கல் இளைஞரின் சடலத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வலியுறுத்தி, அவரது தாயார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தார்.

மலேசியாவில் மர்மமான முறையில் உயிரிழந்த திண்டுக்கல் இளைஞரின் சடலத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வலியுறுத்தி, அவரது தாயார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தார்.
     திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தைச் சேர்ந்த இ.பாத்திமா பீவி(65),  ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தபோது செய்தியாளர்களிடம் கூறியதாவது:  எனது மகன் சையது முபாரக். ராமநாதபுரம் மாவட்டம், சித்தார்கோட்டையைச் சேர்ந்த தஸ்தஹீர் என்பவரின் மருமகன் கனி என்பவர், மலேசியா அருகில் உள்ள சாபா என்ற நாட்டில் உணவக வேலைக்காக எனது மகனை அழைத்துச் சென்றார். கடந்த 2016 ஜூன் மாதம் சென்ற எனது மகன், முதல் 3 மாதங்களுக்கு ஊதியம் கிடையாது என்றும், அதன்பின்னர் தான் சம்பளம் கிடைக்கும் என்றும் தகவல் தெரிவித்தார். இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக அந்த உணவகத்தின் உரிமையாளர் அடித்து துன்புறுத்துவதாகவும், கண்ணாடியால் கீறிவிட்டதாகவும் கட்செவி அஞ்சல் மூலம் ஒளிப் பதிவினை அனுப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள், இந்தியாவுக்கு திரும்பி வந்துவிடுமாறு தெரிவித்தோம். ஆனால், பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டதால் தன்னால் வர முடியாது என்றார். இதனிடையே, சித்தாரக்கோட்டையில் உள்ள எனது உறவினரை தொடர்பு கொண்ட கனி, எனது மகன் சையது முபாரக் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். மேலும், யாருடைய அடையாள அட்டையாவது கொடுத்தால், சடலத்தை புதைத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார். மலேசியாவில் உள்ள எங்களது வேறொரு உறவினரிடம் விசாரித்ததன் மூலம் முபாரக் இறந்துவிட்ட தகவலை உறுதி செய்தோம். 
  வேலைக்கு சென்ற இடத்தில் எனது மகனை, கனி மற்றும் அலி ஆகியோர் சேர்ந்து கொன்றுவிட்டதாக சந்தேகம் எழுகிறது. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். மேலும் எனது மகனின் சடலத்தை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வருவதற்கும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com