வில்பட்டி சாலையை  சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானல் வில்பட்டி சாலை சரியில்லாததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் பொருள்களை தலைசுமையாகவே பொதுமக்கள் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்படுகிறது.

கொடைக்கானல் வில்பட்டி சாலை சரியில்லாததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் பொருள்களை தலைசுமையாகவே பொதுமக்கள் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்படுகிறது.
    கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி ஊராட்சியில் புலியூர், பள்ளங்கி, கோம்பை, மாட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதிகளிலுள்ள அனைத்து கிராமச் சாலைகளும் பெரிய அளவில் சேதமடைந்துள்ளது. இதனால் இப்பகுதிகளிலுள்ள பொதுமக்கள் விவசாயப் பொருள்கள்,  தங்களுக்குத் தேவையான பொருள்களையும் வாங்கி பல கி.மீ தூரம் நடந்தே கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
     மேலும் இப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் 6 கி.மீ தூரம் நடந்தே பள்ளிக்குச் சென்று படித்து வருகின்றனர். மேலும் வில்பட்டி ஊராட்சிப் பகுதிகளில் விளையும் காய்கறிகளை கொண்டு வரமுடியாமல் தலைச்சுமையாகவும், குதிரைகள் மூலமாகவும் மந்தைப் பகுதிக்கு கொண்டு வரவேண்டிய நிலை உள்ளது. எனவே வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com