மாநில கைப்பந்து போட்டி: திண்டுக்கல், வேலூர் அணிகள் முதலிடம்

முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டியில், திண்டுக்கல் மற்றும் வேலூர் அணிகள் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளன.

முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டியில், திண்டுக்கல் மற்றும் வேலூர் அணிகள் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளன.
   இப்போட்டிகள், திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் உள்ள சேரன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற்று வந்தது. இதில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக்கான மொத்தம் 64 அணிகள் பங்கேற்றன.
   நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளின் முடிவில், கால் இறுதி ஆட்டத்துக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டன. பின்னர், அரையிறுதிப் போட்டிக்கு பெண்கள் பிரிவில், ஈரோடு, மதுரை, சென்னை, வேலூர் அணிகளும், ஆண்கள் பிரிவில் கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மதுரை, சென்னை அணிகளும் தகுதி பெற்றன.
  லீக் முறையில் நடைபெற்ற இந்த சுற்றுகளின் முடிவில், பெண்கள் பிரிவில் வேலூர் அணி முதலிடமும், ஈரோடு அணி 2 ஆம் இடமும், சென்னை அணி 3 ஆவது இடமும் பிடித்தன.
  அதேபோல், ஆண்கள் பிரிவில் திண்டுக்கல் அணி முதலிடமும், ஈரோடு அணி 2 ஆவது இடமும், சென்னை அணி 3 ஆவது இடமும் பிடித்தன.   முதலிடம் பிடித்த அணிக்கு ரூ. 14 லட்சம்,  2 ஆம் இடம் பிடித்த அணிக்கு ரூ. 10.50 லட்சம், 3 ஆவது இடம் பிடித்த அணிக்கு ரூ. 7 லட்சம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
   பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதுநிலை மேலாளர் வால்வீமராஜா முன்னிலை வகித்தார்.
  இதில், திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் செ. சௌந்தரராஜன், கால்பந்து கழகத்தின் மாநில துணைச் செயலர் கோ. சுந்தரராஜன், கைப்பந்து கழகத்தின் மாவட்டச் செயலர் எம். சிவக்குமார், துணைத் தலைவர் எஸ். சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com