காது கேளாத குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை: கொடைக்கானலில் 16 பேர் தேர்வு

கொடைக்கானல் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பாசம் டிரஸ்ட் சார்பில், 6 வயதுக்குள்பட்ட காது கேளாத குழந்தைகளுக்கு காக்ளியர்

கொடைக்கானல் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பாசம் டிரஸ்ட் சார்பில், 6 வயதுக்குள்பட்ட காது கேளாத குழந்தைகளுக்கு காக்ளியர் இம்ளான்ட் எனப்படும் காது கேட்கச் செய்யும் கருவி பொருத்தி இலவச சிகிச்சை அளிக்க சனிக்கிழமை 16 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கொடைக்கானல் எஸ்தர் ஆப்ரகாம் வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில், கொடைக்கானல், மதுரை, பெரியகுளம், நிலக்கோட்டை, கெங்குவார்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த முகாமை, கொடைக்கானல் முன்னாள் நகர்மன்றத் தலைவரும், சீயோன் பள்ளித் தாளாளருமான கே.சி. குரியன் ஆப்ரகாம் தொடக்கி வைத்தார்.
முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். இதில் கலந்துகொண்டவர்களுக்கு, மெட்ராஸ் காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி மருத்துவமனையின் மருத்துவர் மோகன் காமேஸ்வரன் தலைமையில், மருத்துவர்கள் குழுவினர் பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர்.   முகாமில் பங்கேற்றவர்களில் 16 பேர் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை பெறுவதற்காகத் தேர்வு செய்யப்பட்டு, முகாமிலேயே அவர்களுக்கு அடையாளச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில், செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுப்பினர்கள், தனியார் மருத்துவமனைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இது குறித்து மெட்ராஸ்  காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி மருத்துவமனை மருத்துவர் மோகன் காமேஸ்வரன் கூறியது: தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இதுவரை 3 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கான இலவச காக்ளியர் இம்பிளான்ட் சிகிச்சை முகாம் நடைபெற்று வருகிறது, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் காது கேளாதவர்கள் அதிகம். இதற்குக் காரணம், உறவு முறையில் திருமணம் செய்து கொள்வதுதான் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com