பழமுதிர்சோலைக்கு வனப்பகுதி வழியாக சாலை: எம்எல்ஏ வலியுறுத்தல்

நத்தத்திலிருந்து அழகர்மலையில் உள்ள பழமுதிர்சோலை சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு  செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சி அடுத்துள்ள

நத்தத்திலிருந்து அழகர்மலையில் உள்ள பழமுதிர்சோலை சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு  செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சி அடுத்துள்ள வனப் பகுதி வழியாக தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளதாக ஆண்டி அம்பலம் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் சாலை அமைக்க வேண்டும் என்பதால், அதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த சாலை ஏற்படுத்தப்பட்டால் நத்தம் பகுதி மக்கள் குறுகிய நேரத்திலும், தூரத்திலும் பழமுதிர்சோலையை சென்றடைவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
மணக்காட்டூர், செந்துறை, குடகிப்பட்டி, பிள்ளையார்நத்தம், செங்குறிச்சி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமமக்கள் பயன்பெறும் வகையில், மணக்காட்டூரில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பேரவையில் வலியுறுத்தியுள்ளேன். அதேபோல், நத்தம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் 50 கி.மீட்டர் தொலைவில் உள்ள வடமதுரை மகளிர் காவல் நிலையத்திற்கு செல்லும் நிலை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் சாணார்பட்டியில் உள்ள பழைய காவல் நிலையத்தில் மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.  அரசுத் தரப்பிலும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். இந்த பணிகள் விரைவில் நடைபெற்றால், நத்தம் தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com