பள்ளி மாணவர்களுக்கு நில வேம்பு குடிநீர் வழங்கல்

காய்ச்சல் பாதிப்புகளுக்கு மருத்துவர் பரிந்துரையில்லாமல், மருந்தகங்களிலிருந்து மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டாம் என, திண்டுக்கல் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

காய்ச்சல் பாதிப்புகளுக்கு மருத்துவர் பரிந்துரையில்லாமல், மருந்தகங்களிலிருந்து மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டாம் என, திண்டுக்கல் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு  குடிநீர் வழங்க வேண்டும் என, கடந்த வாரம் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு தொடர்பானஅனைத்துத் துறை அலுவலர்கள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி, ஸ்ரீராமபுரம்  பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில், திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு  குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஸ்ரீராமபுரம் பேரூராட்சிச் செயலர்  இரா. கோபிநாத் தலைமை வகித்து பேசியது: சுற்றுப்புறத்தை தூய்மையாக பாதுகாப்பதற்கு மாணவர்கள் முன் வரவேண்டும். தங்கள் பெற்றோருக்கும், அருகில் உள்ள உறவினர்களுக்கும் இதுகுறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொசுவிலிருந்து சுற்றுப்புறத்தை பாதுகாத்தால், பல நோய்களிலிருந்து விடுபடலாம் என்றார்.
 அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஷீபா தினகர், மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கிப் பேசியது:
காய்ச்சல்  பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
திருமலைராயபுரம் பள்ளியில் உள்ள 825 மாணவர்களுக்கும் நில வேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. சனிக்கிழமை வரை தொடர்ந்து 6 நாள்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என செயல் அலுவலர் கோபிநாத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் ஐ. அறிவழகன், சித்த மருத்துவர் காந்திமதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com