"பள்ளிகள் நிலை உயர்த்தப்படுவதில் அரசு பாரபட்சம்'

தமிழகத்தில் பள்ளிகள் நிலை உயர்த்தப்படுவதில் மாணவர்களைப் பற்றி சிந்திக்காமல், அமைச்சர்களின் தொகுதிக்கு மட்டுமே

தமிழகத்தில் பள்ளிகள் நிலை உயர்த்தப்படுவதில் மாணவர்களைப் பற்றி சிந்திக்காமல், அமைச்சர்களின் தொகுதிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான ஐ.பெரியசாமி கூறினார்.
 திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் வீ.கூத்தம்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்துக்கு ஒன்றிய திமுக செயலர் ராமன் தலைமை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐ.பெரியசாமி பேசியதாவது: திமுக ஆட்சி காலத்தில் குக்கிராமங்களில் உள்ள பல பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டன. ஆனால், இன்றைக்கு அமைச்சர்களின் தொகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து நிலை உயர்த்தப்படுகிறது. அதிமுக ஆட்சியினால், மக்களுக்கு எவ்வித நலனும் ஏற்பட வில்லை.
 பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் உத்தரபிரதேசத்தில், விவசாயக் கடன் தள்ளுப்படி செய்யப்படுகிறது. ஆனால், தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே விவசாயிகளின் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் நிலை உருவாகும் என்றார்.
பள்ளிக் கட்டடத்துக்கு ரூ.15 லட்சம் நிதி: பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஐ.பெரியசாமியிடம் வீ.கூத்தம்பட்டி பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட நிதியுதவி அளிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சத்தை வகுப்பறை கட்டுமானப் பணிகளுக்கு ஐ.பெரியசாமி ஒதுக்கீடு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com