25 சதவீத இட ஒதுக்கீடு: பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப இன்று வாய்ப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான தேர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான தேர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
 இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ச.கோபிதாஸ் தெரிவித்துள்ளது: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் கீழ் சிறுபான்மையினர் அல்லாத தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தகுதி வாய்ந்த குழந்தைகளை தேர்வு செய்யும் பணி கடந்த மே 31-ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளிலும் நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளில் சிலர் சேர்க்கைக்கு வராத காரணத்தால், நிலுவையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) காலை 10 மணிக்கு சேர்க்கை நடைபெறும். ஏற்கெனவே இணைய வழியாக விண்ணப்பித்துச் சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்படாத குழந்தைகளின் பெற்றோர், சம்மந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று காலியாக உள்ள இடத்தில் தங்கள் குழந்தைகளை சேர்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com