அத்திக்கோம்பையில்  கால்நடை கண்காட்சி தொடக்கம்: காங்கேயம் காளைகள் ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1.25 லட்சம் வரை விற்பனை

ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிழமை தொடங்கிய கால்நடை கண்காட்சியில் காங்கேயம் காளைகள் ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1.25 லட்சம் வரை விற்பனையானது.

ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிழமை தொடங்கிய கால்நடை கண்காட்சியில் காங்கேயம் காளைகள் ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1.25 லட்சம் வரை விற்பனையானது.
 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள  எஸ்.அத்திக்கோம்பையில் அருள்மிகு உச்சிமாகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜூன் 27-ஆம் தேதி வரை இக் கண்காட்சி நடைபெறுகிறது.
 இதனை முன்னிட்டு திண்டுக்கல், தேனி,  மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், கரூர், திருச்சி, புதுக்கோட்டை,திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து உயர்ரக நாட்டு மாடுகள், வளர்ப்புக் கன்றுகள்,ஜல்லிக்கட்டு காளைகள், காங்கேயம் காளைகள், ரேக்ளா ரேஸ் காளைகள், மருத்துவ குணம் வாய்ந்த நாட்டுப் பசு மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன.
 இவற்றை விவசாயிகள், ஜல்லிக்கட்டு வீரர்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர். மேலும் விவசாயிகள் தங்களுக்கு பிடித்த காங்கேயம் வளர்ப்புக் கன்றுகளை அதிக விலை கொடுத்து வாங்கிச்சென்றனர். இதில் காங்கேயம் காளை ஒன்று ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1.25 லட்சம் வரை விற்பனையானது.
 மேலும் ஜல்லிக்கட்டுக்கு பயன்படுத்தும் பூச்சிக் காளை, ஆந்திர கீர் காளைகள், உயர் வகை நாட்டுப் பசு மாடுகள் இக்கண்காட்சியில் இடம் பெற்றன.
 மாட்டுத்தாவணியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாடுகள் வரத்து குறைவாகவே காணப்பட்டது. அதில் காங்கேயம் வளர்ப்புக் கன்றுகள் மட்டுமே அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. இதற்கிடையில் போதிய மழை மற்றும் தீவன பற்றாக்குறையால் விவசாயிகள் தங்களுடைய மாடுகளை ஏற்கெனவே மாட்டுச்சந்தையில் அடிமாட்டு விலைக்கு விற்று விட்டனர். இதனால் மாடுகள் வரத்து குறைந்து விட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com