பழனி மலைக்கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.50 கோடி

பழனி மலைக்கோயில் உண்டியல்களில் கடந்த 20 நாள்களில் ஒன்றரை கோடி ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளி பொருள்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.

பழனி மலைக்கோயில் உண்டியல்களில் கடந்த 20 நாள்களில் ஒன்றரை கோடி ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளி பொருள்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.
 பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் உண்டியல்கள் வைகாசி விசாகத் திருவிழா நிறைவு பெற்றதைத் தொடர்ந்து கடந்த 20 நாள்களில் நிரம்பின. இதையடுத்து திங்கள்கிழமை மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. காணிக்கையாக ரொக்கம் மட்டுமின்றி வெள்ளி மற்றும் தங்கத்தில் மோதிரம், செயின், தாலி, வேல், பாம்பு, வீடு உருவங்களும் செலுத்தப்பட்டிருந்தன. இதில், ரொக்கம் ரூ.1கோடியே 55 லட்சத்து 4 ஆயிரத்து 869, தங்கம் 1,035 கிராம், வெள்ளி 8 ஆயிரத்து 380 கிராம் இருந்தன. பல்வேறு நாட்டு கரன்சிகள் 199 இருந்தன. இவை தவிர பித்தளைப் பாத்திரங்கள், பட்டுப் புடவைகள், கைக்கடிகாரங்கள், ஏலக்காய் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. உண்டியல் எண்ணிக்கையின் போது கோயில் இணை ஆணையர் செல்வராஜ், திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம், ஆய்வாளர் கணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com