கொடைக்கானலில் அரசுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு: பயணிகள் வாக்குவாதம்

கொடைக்கானல் அரசுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால், பயணிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.ரமலான் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறையாக இருப்பதால்,

கொடைக்கானல் அரசுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால், பயணிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறையாக இருப்பதால், கொடைக்கானலுக்கு வழக்கம்போல் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், கொடைக்கானலில் இருந்து சென்னை செல்வதற்கு அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யவேண்டும். கொடைக்கானலில் இருந்து சென்னைக்கு அரசுப் போக்குவரத்து கழகத்தில் ரூ.380, அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்தில் ரூ.400 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. இதில், தனியார் மூலம் பயணிகள் முன்பதிவு செய்வதால், ரூ. 750 வரை வசூலிக்கப்படுகிறதாம். அதேநேரம், தனியார் சொகுசு பேருந்துகளில் ரூ.800 வசூலிக்கப்படுகிறதாம்.
அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், சீசன் காலங்களில் சென்னைக்கு இரண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் கொடைக்கானலில் இருந்து சென்னைக்கு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் தான் தனியார் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கொடைக்கானலில் இருந்து சென்னை செல்வதற்கு தனியார் மூலம் ரூ.750 வசூலிக்கப்பட்டது. அப்போது, பயணிகள் பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், டிக்கெட் முன்பதிவு செய்த தனியார் முகவர் அலுவலகத்தை பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.
இது குறித்து அரசு விரைவுப் பேருந்து நடத்துனர் கூறுகையில், பல ஆண்டுகளாக இப் பிரச்னை இருந்து வருகிறது. இருப்பினும், தற்போது வந்த புகார் குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும் என்றார்.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பேருந்து கொடைக்கானல் கிளை அலுவலர் ஒருவர் கூறுகையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கொடைக்கானலிலிருந்து சென்னைக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டால் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும். விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டால், பேருந்து இயக்கப்படும். ஆனால், அரசு விரைவுப் பேருந்தில் தனியார் மூலம் கொடைக்கானலிலிருந்து சென்னை, பெங்களுரூ போன்ற இடங்களுக்கு முன்பதிவு செய்யப்படுகிறது என்றார்.
சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், கொடைக்கானலுக்கு பண்டிகை நாள்களிலும், விடுமுறை நாள்களிலும், அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தில் தனியார் முகவர் மூலம் கூடுதலாகக் கட்டணம் வசூலிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com