பழனி அருகே மர்மக் காய்ச்சலால் சிறுமி சாவு

பழனியை அடுத்த புதுஆயக்குடியில் மர்மக் காய்ச்சலால் சிறுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

பழனியை அடுத்த புதுஆயக்குடியில் மர்மக் காய்ச்சலால் சிறுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
பழனி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த 2மாதங்களாக மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. பழனி,நெய்க்காரபட்டி, ஆயக்குடி, வில்வாதம்பட்டி, தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால்உயிரிழந்துள்ளனர். இக் காய்ச்சலைக்கட்டுப்படுத்தும் பொருட்டு, நகராட்சி நிர்வாகம், பொது சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், காய்ச்சல் கட்டுப்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது. பழனி அருகே புதுஆயக்குடி ஓபுளாபுரத்தைச்சேர்ந்தவிவசாயிராமசாமி. இவரது மகள் ஈஸ்வரி(14),அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த 3நாள்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தஈஸ்வரியை,பழனி, ஆயக்குடி அரசு மருத்துவமனைகளில் சேர்த்தனர். ஆனால், உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால், சனிக்கிழமை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
அங்கு,மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com